spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

-

- Advertisement -

சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 1 கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவில்  பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள்,  சிறார் இலக்கிய நூல்கள்  மற்றும்  பள்ளிப் பாடநூல்கள்  ஆகியவை கிடைக்கும்.1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

we-r-hiring

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இணை இயக்குநர் சங்கர சரவணன் பேசுகையில், ”  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் திசைதோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட  84 நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டாா்.1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப் பணியிலும் தமிழ்ப் பணியிலும் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நூல்களை வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் எளிதில் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இணைய வழி விற்பனைக்கான மின்வணிக  இணையதள வசதியையும் (www.tntextbooksonline.com) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தாா்.1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்  24 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள், 1 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 70 இலட்சம் ரூபாய் செலவில் 1050 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள முழுநேர கிளை நூலகத்திற்கான  புதிய  கட்டடம்  மற்றும் பேருந்து நிலையங்கள் / மருத்துவமனைகள் /  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 49.78 இலட்சம்  ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 70 சிறப்பு நூலகங்கள், என  மொத்தம் 29.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உட்பட மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளும், பதிப்பகத்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என தெரிவித்துள்ளாா்.

வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்

MUST READ