spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்..."- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

-

- Advertisement -

 

"கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்..."- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

we-r-hiring

கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க.வின் மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அதன்படி, கோவை மக்களவைத் தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய அரசு உதவியுடன் கோவையில் உயரதர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து ஆண்டுகள் முடிவில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாற்றத்தைச் சந்தித்திருக்கும்.

கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், காமராஜர் பெயரில் கோவையில் உணவகங்கள் அமைக்கப்படும். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள ஆன்மீகத் தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுத்தை அச்சம்- அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற அலுவலங்களிலும் மக்கள் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும். POWER TEX மீண்டும் கொண்டு வரப்படும்; நொய்யல், கௌசிகா நதிகள் மீட்கப்படும்; ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். கோவையில் அடுத்த 500 நாட்களில் மக்கள் மருந்தகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளனர்.

MUST READ