spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

-

- Advertisement -

 

குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

we-r-hiring

செஸ் கேண்டிடேடஸ் தொடரை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்….. படப்பிடிப்பு எப்போது?

கேண்டிடேட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “17 வயதில் கேண்டிடேடஸ் தொடரை வென்று வரலாறு படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் குகேஷ் வெல்ல வாழ்த்துகள். மிக இளைய வயதில் குகேஷ் வரலாற்று சாதனை படைத்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாகும் இளம் வயது நடிகை…..’குட் பேட் அக்லி’ பட அப்டேட்!

அதேபோல், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், “17 வயதில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிப் பெற்று குகேஷ் வரலாற்று வெற்றியைப் பதிவுச் செய்துள்ளார்; போட்டியில் அவரது முதிர்ச்சியும் வெளிப்பட்டது; சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ