spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!

வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!

-

- Advertisement -

கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவா் பலி.வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!கடந்த 2020 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை பறித்தது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இதனை தடுக்க மாஸ் அணிவது மற்றும் தடுப்பூசி போடுவது போன்ற பல நடவடிக்கைகளை அரசு மேற்க்கொண்டது. யாரும் வெளியே வரக் கூடாது என்று ஊரடங்கு போடப்பட்டு, கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறையிடமிருந்து முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த எண்ணிக்கை தற்போது 5,000 த்தை தொட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது.

இச்சூழலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெரப்பேரியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ஹைதாராபாத்தில் பில்டிங் காண்ட்ராக்டராக (ஒப்பந்ததாரர்) பணி செய்து வந்துள்ளாா். அவருக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கபட்டது. இதன் காரணமாக, தனது சொந்த ஊருக்கு திரும்பிய அவர் இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரனோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையே, அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனா்.

ஜூன் 7 உலகளாவிய அழிவு! பாபா வெங்கா கணிப்பு…

we-r-hiring

 

MUST READ