
கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!
தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல், சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், தேங்கிய நீரை அகற்றும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில், மாணவர்களின் நலன் கருதி விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஜன.08) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், தொடர் கனமழை காரணமாக, நாகை, கீழ்வேளூர் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாபெரும் வெற்றி பெற்ற அந்த இந்தி படத்தில் நடிக்கவிருந்த சூர்யா….. இயக்குனர் பகிர்ந்த தகவல்!
இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதிக்குள் நிறைவடையவிருக்கும் நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. அத்துடன், கனமழை பெய்வதால் பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


