Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த டெல்லி முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த டெல்லி முதலமைச்சர்!

-

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த டெல்லி முதலமைச்சர்!
Photo: TN Govt

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்துப் பேசினார்.

தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…

இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காகவும், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.18) மாலை 06.00 மணியளவில் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார்.

டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று (டிச.19) காலை 11.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, தன்னை சந்திக்க வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உங்களின் ஒருவன் நூலின் ஆங்கிலப் பதிப்பான ‘One Among You’ நூலினை வழங்கினார்.

விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!

இந்த சந்திப்பின் போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

MUST READ