- Advertisement -
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 33 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் ஒரு பகுதியாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தீபாவளி விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து, பல்வேறு விதமான விலங்குகள், பறவைகள் கண்டு மகிழ்ந்தனர்


இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 4 நாட்களில் சுமார் 33 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.