வழக்கம் போல திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது நாளுக்கு நாள் பிரச்சாரங்கள் செரிய செரிய கூட்டணி இறுகிக் கொண்டு பலமாக இருக்கும் சந்து பொந்துகள் அடைக்கப்படும். மீண்டும் இதே திமுக கூட்டணி ஆட்சி 2026ல் வரும் அப்போது முடிவு செய்ய வேண்டிய விஷயங்களை இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என கி.வீரமணி தெரிவித்துள்ளாா்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஓ பி சி பிரிவின் தலைவர் அணில் ஜெய்ஹிந்த் சென்னை பெரியார் திடலில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது ஓ பி சி பிரிவின் மாநில தலைவர் நவீன் மாநில செயல் தலைவர்கள் புரசை பழனிவேல் ராஜன், கொடுங்கையூர் செல்வம், மற்றும் ஓ பி சி பிரிவின் மாநில நிர்வாகிகள் கோபி திவ்யா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அணில் ஜெய்ஹிந்த், “கடந்த 50 வருடங்களாக சமூக நீதிக்காக நான் பயணித்து வருகின்றேன். இன்று கீ வீரமணி அவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். சமூக நீதி குறித்து பல்வேறு கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொண்டு கலந்துரையாடினோம். நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் ஓபிசி பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவன். இந்த சந்திப்பு ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பாக எங்களுக்கு இருந்தது.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கே வீரமணி, “மண்டல் கமிஷன் போராட்ட காலத்தில் இருந்து அணில் ஜெய்ஹிந்த் அவர்களை நான் நன்கு அறிவேன். காங்கிரஸ் கட்சி சமூக நீதிக்காக பாடுபடக் கூடிய கட்சி காங்கிரஸ் கட்சியில் ஒரு தனி தலைவராக ஓ பி சி பிரிவின் தலைவராக அணில் ஜெய்ஹிந்த் அவர்கள் இருக்கின்றார். பெரியார் நினைவிடத்தில் அவர் வருகை தந்து சிறப்பு வாய்ந்த இந்தியாவில் சமூக நீதி தளத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பது குறித்து விரிவாக நாங்கள் பேசினோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் அரசியலில் அதை முடிவு செய்ய வேண்டியது இங்கே திமுக கூட்டணியின் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அதேபோல் அங்கே முடிவு செய்ய வேண்டியவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவரும் குறிப்பாக இளம் தலைவர் ராகுல் காந்தியும் தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் அன்னை சோனியா காந்தி உள்ளிட்டவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மற்றவர்கள் பேசுவது ஊடகங்களுக்கு வேண்டுமானால் தீனியாக இருக்கலாமே தவிர மற்றபடி எந்த விதமான மதிப்பும் இருக்க முடியாது. வழக்கம் போல திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது நாளுக்கு நாள் பிரச்சாரங்கள் செரிய செரிய கூட்டணி இறுகிக் கொண்டு பலமாக இருக்கும் சந்து பொந்துகள் அடைக்கப்படும். மீண்டும் இதே திமுக கூட்டணி ஆட்சி 2026-ல் வரும் அப்போது முடிவு செய்ய வேண்டிய விஷயங்களை இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே அதிமுக ஒன்றாக இருந்தபோதே வென்றவர்கள் என்று கூறினாா்.
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் பங்குச்சந்தை 4வது நாளாக கடும் சரிவு…


