- Advertisement -
திமுக அரசால் வெள்ளப் பாதிப்புகள் குறைந்தது – கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் வெள்ள பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாக, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான தேசிய அளவிலான 3-வது அமர்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கடைக்கோடி மக்களை சென்றடையும் வகையில் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துதல், வானிலை கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல், வெள்ள பாதிப்புகளை தணிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றை, இந்திய அரசிடமிருந்து நிதி வரும் வரை காத்திருக்காமல், தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்தி வருவதாக கூறினார்.