வைகோ நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க உதவ வேண்டும் என மல்லை சத்யா கூறியுள்ளாா்.
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிட வெற்றி கழகத்தின் தலைவர் மல்லை சத்யா மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனத்திற்கு பேராபத்து வந்து கொண்டிருக்கிறது அதை காக்க வேண்டியது நமது கடமை என்றார்.
திராவிட இயக்கத்தின் மேடைகளில் சுதந்திர பறவையாக பிரகாசித்தவர் நாஞ்சில் சம்பத். அவர் இன்று தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். அவர் திராவிட இயக்க கருத்துகளை முழங்குவார் என்பதில் மாற்று கருத்து இல்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தான் சொல்கிறோம் என தவெகவில் நாஞ்சில் சம்பத் இணைந்தது குறித்த கேள்வி பதலளித்தாா்.

மல்லை சத்யா மீதான துரை வைகோ குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், என் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை என்றும் மல்லை சத்யா திருடிவிட்டார் என்று சொன்னால் அதை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர் சொன்ன குற்றச்சாட்டின் உளவியல், தொட்டில் பழக்கம் என்றால், என் பின்னால் உள்ள அத்தனை பேரையும் சொல்கிறார். அவர் பொருள் புரிந்து, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து இன்னும் நிறைய பாடங்களை படிக்க வேண்டிய கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
நாங்கள் சொன்னதை போன்று அவர் இன்னும் அரசியலில் எல்கேஜியாகவே இருக்கிறார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக, தலைவர் வைகோவின் பெயரில் சென்றிருக்கிறார். ஆனால் அந்த தகுதி இல்லை என்பதை அவருடைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மெய்ப்பித்துக் கொண்டு வருகின்றன என்பதுதான். நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இவர் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும்.
வைகோ விரைவில் நடைப்பயணத்தை துவங்க இருக்கிறார். அவர் உடல் நலனில் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வைகோ ஆரோக்கியமாக இருந்து 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உறுதியாக இருக்க வேண்டும். மதுரை திருப்பரங்குன்றத்தில் சமூக ஒற்றுமைக்கு எதிரான பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் விரைவில் தமிழ்நாடு அரசு சென்ற காரணத்தால், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு நடக்கும் என்றும், சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு இருக்கிறது. பொதுவான அடிப்படையில் அந்த பிரச்சினை அணுக வேண்டும் என்பது உங்கள் வேண்டுகோள் என்றும் , மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி வரவேண்டும் என நாங்கள் விரும்புவதாகவும் கூறினார்.
ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பா.ம.க – ஜி.கே.மணி கருத்து


