spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்னி பேருந்து பிரச்சனையில் தீர்வுக் காண வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஆம்னி பேருந்து பிரச்சனையில் தீர்வுக் காண வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

-

- Advertisement -

ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால், தமிழக பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.ஆம்னி பேருந்து பிரச்சனையில் தீர்வுக் காண வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்இது குறித்து அ.இ.அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளரும், எதிா்கட்சித்தலைவரமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 09.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால், தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, விடியா திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்“ என்று வலியுறுத்துகிறேன்.

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை…

MUST READ