Homeசெய்திகள்தமிழ்நாடு"மின்கட்டண உயர்வை ரத்துச் செய்ய வேண்டும்"- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“மின்கட்டண உயர்வை ரத்துச் செய்ய வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

-

 

பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமை - டிடிவி தினகரன் கண்டனம்

சிறு, குறு தொழில் நிறுவன கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!

இது தொடர்பாக, அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மின் கட்டண உயர்வால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்திருக்கும் நூல் உற்பத்தி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருப்பதால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் பொருளாதார மந்தநிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை என ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முற்றிலும் முடங்கும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

‘டைம் அவுட் விக்கெட்’- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளான நிலைக்கட்டண உயர்வு மற்றும் உச்ச நேர மின் கட்டணத்தை ரத்து செய்து தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ