அமைச்சர் திண்டுக்கல் ஐ பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்க் கொண்டு வருகின்றனர்.திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர், அவரின் மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
மக்கள் பிரதிநிதிகளுக்கான( MP, MLA) சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை ஆறு மாதத்துக்கு விசாரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதா? என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை மேற்க்கொண்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள ஐ பெரியசாமியின் அரசு பங்களா, சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள பழனி எம்எல்ஏ செந்தில்குமாரின் அறை ஆகிய இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
