spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'கோகுலாஷ்டமி' வாழ்த்துகள் - எடப்பாடி

‘கோகுலாஷ்டமி’ வாழ்த்துகள் – எடப்பாடி

-

- Advertisement -

அதிமுக பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ‘கோகுலாஷ்டமி’க்கு தமது உள்ளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.'கோகுலாஷ்டமி' வாழ்த்துகள் - எடப்பாடிமேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்றும்; ‘கோகுலாஷ்டமி’ என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில், மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்’ என்கிற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்” என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.

வீடு வாடகைக்கு கேட்க வந்த நபர்… ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை…

MUST READ