spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீடு வாடகைக்கு கேட்க வந்த நபர்… ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை…

வீடு வாடகைக்கு கேட்க வந்த நபர்… ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை…

-

- Advertisement -

உஷாா்! மக்களே உஷாா்! வீடு வாடகை கேட்க வந்த நபரால் மும்பையில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீடு வாடகைக்கு கேட்க வந்த நபர்… ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை…மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் நிஷா என்பவா் வசித்து வருகிறாா். இவரது சகோதரி ஜோதி பனுசாலி (27) என்பவா் குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர். சம்பவம் நடைபெற்ற தினத்தன்று நிஷா வெளியே சென்றுள்ளாா். அவரது மாமியாா் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளாா். அப்போது ஒரு நபா் வீடு வாடகைக்கு உள்ளதா? என்று கேட்டு வந்துள்ளாா். நிஷாவின் இல்லை என்று கூறியுள்ளாா். உடனே அந்த நபா் உங்க பாத்ரூம் போக வேண்டும். உங்க பாத்ரூமை யூஸ் பண்ணிக்கலாமா? என்று கேட்டுள்ளாா். நிஷாவின் மாமியாரும் சாி என்று கூறி தம்முடைய வீட்டின் பாத்ரூமை காட்டியிருக்கிறாா். உள்ளே சென்ற சிறிது நேரத்தில் குழாயில் நீா் கசிந்துக் கொண்டு இருக்கிறதே? அதனை சரிசெய்யக் கூடாதா? என்று வினவியுள்ளாா். நிஷாவின் மாமியாரும் அப்படியா! என்று குளியலறைக்குள் சென்று பாா்த்துள்ளாா். உடனே அந்த நபா் நிஷாவின் மாமியாரை பாத்ரூமுக்குள்ளேயே வைத்து பூட்டி சென்றுள்ளாா்.

we-r-hiring

பின்னா், வீட்டிலிருந்த நகைகள், பணத்தை அந்த நபா் கொள்ளையடித்து சென்றுவிட்டார். பாத்ரூமுக்குள்ளிருந்தே நிஷாவின் அலறிய சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். அதன்பின்னா் தான் வீட்டிலிருந்த நகைகள் திருடுபோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினருக்கு புகாா் அளிக்கப்பட்டது. அந்த புகாாின் அடிப்படையில் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் காவல் துறையினா் ஆய்வு செய்தனர்.

அந்த சிசிடிவி கேமராவில் தாடி வைத்த நபர் ஒருவர், நிஷாவின் மாமியார் வீட்டுக்கு சென்றது பதிவாகியிருந்தது. அதே நபர், ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று தன்னுடைய முகத்திலிருந்த தாடியை பிய்த்து எடுத்துவிட்டு, தான் அணிவித்திருந்த பேன்ட், சட்டைகளையும் அவிழ்த்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னா் இதுகுறித்து காவல் துறையினா் தீவரமாக விசாரணையை மேற்கொண்டனா். அப்போது தான் அது ஒரு பெண் என்பது தொியவந்தது. அந்த  பெண் நிஷா குடும்பத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவரா? என்ற கோணத்தில் விசாரணையை காவல் துறையினா் மேற்க்கொண்டனா்.

ரயிலில் அந்த பெண் தாடி பிய்த்து எடுத்த வீடியோவை நிஷாவிடம் காவல்துறையினா் காட்டியபோது தான் அந்த அதிா்ச்சித் தகவல் கிடைத்தது. அது தன்னுடைய சகோதரி ஜோதி பனுசாலி என்று நிஷா கூறினாா். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரித்தனர். அந்த பெண் ஷேர் மார்க்கெட்டில் 30 லட்சம் ரூபாயை இழந்துவிட்டேன். இதனால் தன்னுடைய நகைகள் மொத்தத்தையும் அடகு கடையில்  அடகு வைத்துவிட்டேன். எனவே எனது நகைகளை மீட்பதற்காகவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் தந்தார்.

இதையடுத்து, நிஷா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அப்பெண்ணிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் கொள்ளையடித்த பெண் ஜோதியையும் கைது செய்தனர். அதாவது கொள்ளை நடந்து 12 மணி நேரத்திலேயே, குற்றவாளி ஜோதியை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அக்டோபரில் ‘இட்லி கடை’ வெந்துவிடும்….. பார்த்திபன் வெளியிட்ட பதிவு வைரல்!

MUST READ