spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் திமுகவிற்கு இந்த தேர்தலில் வாக்கு கிடைத்தது - இபிஎஸ்...

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் திமுகவிற்கு இந்த தேர்தலில் வாக்கு கிடைத்தது – இபிஎஸ் பேட்டி!

-

- Advertisement -
kadalkanni

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் திமுகவிற்கு இந்த தேர்தலில் வாக்கு கிடைத்தது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒங்கிணைப்பு குழுவா? போகின்றவர்கள் வருகின்றவர்கள் அமைப்பதெல்லம் ஒரு குழுவா ? ஊடகங்கள் தான் அவர்களை பெரிதாக்குகிறார்கள். விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்த விரைவில் அறிவிக்கப்படும். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு பின்பே இந்த தேர்தலில் கூடுதலாக வாக்கு சதவீதம் அதிமுகவிற்க்கு உயர்ந்திருக்கிறது.2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும்.

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் அவர்களுக்கு வாக்கு ஓரளவிற்கு வந்தது. சட்டமன்ற தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் மக்கள் பிரித்துப் பார்க்கிறார்கள். மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் . தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் திமுகவிற்கு இந்த தேர்தலில் வாக்கு கிடைத்தது .எங்களைப் போல தனியாக நின்றால் வாக்கு கிடைத்திருக்காது என இவ்வாறு பேசினார்.

 

 

 

MUST READ