spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -

"1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?"- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பா.ஜ.க. அரசால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 1.7.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், மேற்படி 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும், மேலும் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக திமுக-வின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நாளை (5.7.2024) நண்பகல் 12 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பாக, கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. I.S. இன்பதுரை, Ex. M.L.A., அவர்கள் தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

"எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக வழக்கறிஞர் நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ