spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டிமூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணமடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருக்கிறது. அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என  தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

we-r-hiring

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட உள்ளது. இந்த தொகுதிக்கான  வேட்பாளர் வருகிற 12-ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோமதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார், அப்போது 11,629 வாக்குகள் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார் அப்போது நாம் தமிழர் கட்சிக்கு 10,827 வாக்குகள் கிடைத்தது.

தற்போது நாம் தமிழர் கட்சி 2025 பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

MUST READ