HMPV வைரஸ் குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
HMPV வைரஸ் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், HMPV வைரஸ் பற்றிய செய்தி வந்தவுடன் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக தெரிவித்தார். தொற்று நோய் பரவும் காலத்தில் பொதுவாக அவசர நிலை வந்தால் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து அறிவுறுத்தல் வருவது வழக்கம், அது போல இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை எனவும், மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்தும் நேற்று மாலை வரை எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை என தெரிவித்தார்.

HMPV வைரஸ் குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என கூரிய அவர், Hmpv வைரஸ்க்கு என்று தனி சிகிச்சைகள் எதுவும் இல்லை, மூன்று முதல் நான்கு நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் சேலத்தில் ஒருவருக்கும் ,சென்னையில் ஒருவருக்கும் HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.
HMPV வைரஸ் குறித்து வரும் வதந்திகள் மக்களை அச்சமடைய செய்துள்ளது, சீனாவில் இருந்து தமிழர் ஒருவர் வெளியிட்ட காணொளியில் அங்கு சகஜ நிலை நிலவுவதை உணர்த்தியுள்ளார். எனவே மக்கள் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என தெரிவித்தார். வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், பொதுவெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது நல்லது. அடிக்கடி கை கழுவுவது தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது என அறிவுறுத்தினார்.
ரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு – பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்