தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டண விபரங்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் விளம்பரப் பலகைகளில் (Notice Board) கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண விபரங்கள் மற்றும் அரசு நிர்ணயித்த கட்டண விகிதங்கள் குறித்து பெற்றோர் தரப்பில் கேட்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம் இந்த முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது.

பள்ளியின் நுழைவாயில் அல்லது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியப் பகுதியில், அரசு அங்கீகரித்த கட்டணப் பட்டியலைத் தெளிவாகப் பலகையாக வைக்க வேண்டும்.இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ (CBSE) மற்றும் இதர தனியார் பள்ளிகளும் பின்பற்றுவதை தனியார் பள்ளிகள் இயக்குநர் (Director of Private Schools) உறுதி செய்ய வேண்டும்.இதன் மூலம் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பது தடுக்கப்படும் என்றும், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அதிரடி உத்தரவு, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையால் அவதிப்படும் லட்சக்கணக்கான பெற்றோர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது – மு.வீரபாண்டியன் கருத்து
