
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (டிச.30) காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த நடிகர் விஜய்க்கு, அவரது மக்கள் இயக்கத்தினர், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாகச் சென்ற நடிகர் விஜய், நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்.
500- க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து வழங்கினார். அத்துடன், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாயை வழங்கிய நடிகர் விஜய், அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!
இந்த நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் என 1,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.