தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.இந்நிலையில் முக்கிய சுற்றுலாத்தின் முக்கிய வழிதடமான இப்பகுதி வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினம்தோறும் சென்றுகொண்டிருக்கின்றன.இந்நிலையில் சாலை முறையாக பராமரிக்கப்படாததால் உயர் மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இன்று அதிகாலை சரிந்து விழுந்தது.இதனை அறிந்து வந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் சுவரை சரிசெய்யும் போது அடுத்தடுத்த சுவர்களிலும் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இப்பாலத்தின் தரம் குறித்து முறையாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருச்சி,வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ,கனரக வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.ஆதலால் இப்பாலத்தை முறையாக ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


