Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34ஆவது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34ஆவது முறையாக நீட்டிப்பு!

-

- Advertisement -

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடிகர்களையும் விட்டுவைக்காத டீப் பேக்… மர்ம கும்பல் மீது ரன்வீர் சிங் வழக்குப்பதிவு…

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்ச்சரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி அவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 25- ஆம் தேதி வரை 34ஆவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றக் காவல் முடியும் ஏப்ரல் 25- ஆம் தேதி காணொளியில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவில் ஓரிரு நாளில் வாதங்கள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

திரையுலகை கிறங்கடிக்கும் ஆவேஷம்… படத்தை பாராட்டிய சாம்…

அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டது.

MUST READ