Homeசெய்திகள்தமிழ்நாடுஎச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி: நான்கு போ்...

எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி: நான்கு போ் கைது

-

- Advertisement -

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என கூறி போலி ஆவணங்கள் மூலம் எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி:  நான்கு போ் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை  சேர்ந்த குமார்,  ஏகாம்பரம், கேசவன் கங்காராஜ், கிருஷ்ண மூர்த்தி ஆகிய நான்கு பேர் சென்னை அமைந்தகரை எச்டிஎப்சி வங்கியில் தனிநபர் கடன் பெற்றுள்ளனர்.  இதில் ஏகாம்பரம், கேசவன் கங்காராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று பேரும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுவதாக கூறி குமார் என்பவர்  போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.  இந்த ஆவணங்கள் மூலமாக கடந்த 2024 ஆம் ஆண்டு பல தவணைகளில் சுமார் இரண்டு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். கடன் தொகைக்கான தவணையை முறையாக திருப்பி செலுத்தவில்லை.  பின்னர் இவர்கள் குறித்து வங்கி விசாரித்த பொழுது இவர்கள் அனைவரும் கூலி மற்றும் விவசாய வேலை செய்து வருவது தெரியவந்தது.

வங்கி நிர்வாகத்தின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி புலனாய்வு பிரிவு வழக்கு பதிவு செய்து, குமார், ஏகாம்பரம், கேசவன் கங்காராஜ் கிருஷ்ணமூர்த்தி உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். நாகராஜி, மணிகண்டன் கோபால், வெங்கடேஷ் ஹர்சா ஆகிய தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஜாமீன் கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில் ஆஜரான சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன்,  விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் பலர் இந்த மோசடியில் தொடர்புள்ளதாகவும் குமார் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்து 40 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று இருப்பதாகவும், மற்றவர்கள் பெற்ற கடன் தொகையை வேறு நபர்களின் பெயருக்கு மாற்றி சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் அதனை மீட்க வேண்டியுள்ளதாகவும் எனவே தற்போது உள்ள நிலைமையில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். காவல்துறையின் இந்த  வாதத்தை ஏற்ற  நீதிபதி நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பார்வை மாற்றுதிறனாளிகளின் வாழ்வு மேம்பட அரசு திட்டமிட வேண்டும் – கூட்டமைப்பினர் கோரிக்கை

MUST READ