spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் i-Padகளை தயாரிக்க Foxconn முடிவு!

தமிழகத்தில் i-Padகளை தயாரிக்க Foxconn முடிவு!

-

- Advertisement -

தமிழகத்தில் i-Padகளை தயாரிக்க Foxconn முடிவு!

ஐ போன்களைத் தொடர்ந்து ஐ-பேட்களை தமிழகத்தில் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் உற்பத்தி தொழிற்சாலையில், ஐ-போன்களுடன், வரும் காலத்தில் ஐ-பேட்களையும் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

we-r-hiring

இரண்டு ஆண்டுகளில் , ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின், உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க பாக்ஸ்கான் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டுவரும் ஐ-போன்களுடன், ஐ-பேட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசுடன், ஏற்கனவே இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், மேக்(MAC) மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை என்றும் பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதனில் வைரம் – ஆய்வில் பகீர் தகவல்!

ஐ-பேட்களை தயாரிக்கும் முடிவையடுத்து, பாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கும் என்ற அதிகாரிகளின் தகவல் வரவேற்கத்தக்கது.

MUST READ