spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!

ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!

-

- Advertisement -

அரசு பேருந்து ஜப்தி

ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என  சென்னை மாநகர போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ,சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதலாவது போட்டியில் மோதுகின்றன.

சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள், ஆன்லைன் டிக்கெட் காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் போட்டி நடைபெறுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவும், போட்டி முடிந்த பிறகு 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லலாம். குளிர்சாதன பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என மாநகர போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

MUST READ