- Advertisement -
சென்னை வாழ் மூத்த குடி மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள வரும் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடையாள அட்டை பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலையால் சமூகவிரோதிகளின் கூடாரமாகியுள்ளது பாஜக – ஜெயக்குமார்
சென்னையை சார்ந்த மூத்த குடிமக்கள் டோக்கன் பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் :
* இருப்பிடச் சான்று
* ஆதார் அட்டை
* வாக்காளர் அட்டை
* ஓட்டுநர் உரிமம்
* கல்வி சான்றிதழ்
* 2 வண்ண புகைப்படம்
வரும் 21 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை காலை 8:00 மணி முதல் இரவு 7.30 மணி வரை 42 பணிமனைகளிலும் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.