spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநரை வரவேற்ற சர்ச்சைக்குரிய துணைவேந்தர்!

ஆளுநரை வரவேற்ற சர்ச்சைக்குரிய துணைவேந்தர்!

-

- Advertisement -

 

ஆளுநரை வரவேற்ற சர்ச்சைக்குரிய துணைவேந்தர்!

we-r-hiring

பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகைத் தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஊழல் வழக்கில் சிக்கிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களின் கருத்தை கேட்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

சர்ச்சைக்கு பெயர் போன பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் அனுமதியின்றி நிறுவனம் தொடங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கருப்பூர் காவல்துறையினர், துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் துணைவேந்தருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கியது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன் அறை, பதிவாளர் தங்கவேல் அறை மற்றும் அவர்களது இல்லங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக ஆவணங்களைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அ.தி.மு.க. சின்னம்- ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை தொடரும்!

இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு வருகைத் தந்தார். பின்னர், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்துள்ள துணைவேந்தர் ஜெகநாதன், பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆளுநரை, துணைவேந்தர் ஜெகநாதன் பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்றார். காவல்துறையினரால், கைதாகி ஜாமீனில் உள்ள துணைவேந்தர், ஆளுநரை வரவேற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர் அமைப்பினர், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

MUST READ