
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. வெளியிட்டுள்ளார்.

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி
அதில், ஜூலை 26- ஆம் தேதி நடைபெற்ற தலைமைச் செயலாளரின் ஆய்வு கூட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதில், காணப்பட்டக் குறைப்பாடுகளைக் களைந்து நகர்ப்புறப் பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4- ஆம் தேதி வரை நான்கு தினங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நியாய விலைக்கடைக்கும் தனித்தனியாக விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்ப விநியோகத்தை முடிக்க வேண்டும்.
ஆவடி CRPF கபடி போட்டி 2023 – கோப்பையை வென்றது யார்?
விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் தவறாமல் எழுதப்பட வேண்டும். டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒரு முகாமிற்கு ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் வழங்கப்பட்டன என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும். விண்ணப் படிவம் வேண்டாம் என மறுப்புத் தெரிவிப்பவர்கள் விவரங்களையும் சேகரிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.