- Advertisement -
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நடைபெறுகிறது.
2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களும், சென்னையில் மட்டும் 251 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 75,185 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். குரூப் 2 தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.