spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றக அறிவுரை

குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றக அறிவுரை

-

- Advertisement -

குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றக அறிவுரை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு https://apply.tnpscexams.in/ மற்றும் https://www.tnpsc.gov.in/ (Onscreen Certificate Verification) ஆவணங்களை ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration) மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

we-r-hiring

கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 09.11.2024 முதல் 21.11.2024 வரை தேர்வாணைய இணைய தளத்தின் ஒரு முறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யலாம். தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

 

MUST READ