தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 15) சென்னை, கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1,000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தார்.
செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்?
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவரை வர விடாமல் சிலர் தடுத்து விட்டனர். பல்வேறு சோதனைகளைக் கடந்து தான் தானும் வளர்ந்து வருகிறேன். ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் பாகத்தின் வெளியீட்டு விழா, கடந்த 1975- ஆம் ஆண்டு ஜனவரி 12- ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்பதாக அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பங்கேற்காமல் விடாமல் தடுத்து விட்டனர். வேலூரில் 250 படுக்கைகளுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?
இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.