
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத மணல் குவாரி வழக்குகளில் மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (நவ.28) காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது தான். வழக்கு குறித்து குறுகிய காலத்தில் பதிலளித்ததாக அமலாக்கத்துறைக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி
எனினும், விசாரணைக்கு தடையில்லை எனத் தெரிவித்துள்ள நீதிபதிகள், அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவிற்கு அரசும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் விளக்கம் அளிக்க மூன்று வாரம் அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 19- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.