spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரியில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு... லேசர் ஷோ, வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும்...

புதுச்சேரியில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு… லேசர் ஷோ, வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு!

-

- Advertisement -

புதுச்சேரியில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு புதுச்சேரி நகர பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு சார்பில் லேசர் ஷோ, வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!

we-r-hiring

ஆங்கில புத்தாண்டு பிறப்பை கொண்டாட புதுச்சேரிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் புதுச்சேரி வருவார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வந்துள்ளனர். குறிப்பாக புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் லட்சக்கணக்கானவர்கள் கூடி நள்ளிரவு புத்தாண்டை கொண்டாடும் நிலையில், கடற்கரை சாலை அமைந்திருக்க கூடிய ஒயிட் டவுன் பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று பகல் 12 மணி முதல் ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைக்கு செல்பவர்கள் ஒயிட் டவுன் பகுதியை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய 10க்கும் மேற்பட்ட வாகன நிறுத்தும் இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து அரசு மூலம் இயக்கப்படும் இலவச பேருந்தில கடற்கரை சாலைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒயிட் டவுன் பகுதி குடியிருப்பு வாசிகள் மட்டும் அவர்களின் வீடுகளுக்கு செல்ல பிரத்யேக பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவசர சேவைகளுக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கான தனி பாதையும் உருவாக்கப்பட்டுள்ளது.

பொய் சொல்வதில் புதுவை ஆளுநர் தமிழிசை கைதேர்ந்தவர் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
 

புத்தாண்டு பிறப்பையொட்டி இன்று இரவு லட்சக்கணக்கானோர் கடற்கரை சாலையில் கூடுவார்கள் என்பதால், கடற்கரை சாலையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 2000 சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புதுச்சேரி மாநில எல்லையிலேயே சுற்றுலாப் பயணிகள் சோதனை செய்யப்பட்டு, அவர்களின் குழந்தைகள் கைகளில் பெற்றோர்களின் தொலைபேசி எண் ஒட்டப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவின் காரணமாக புதுச்சேரியில் பெரியளவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. அதனால் நடப்பு ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் லேசர் ஷோ, வாண வேடிக்கை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு கடற்கரை சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மதுபான கடைகளும் கலால்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுபோதைத் தெளியும் வரை வாகனங்கள் திருப்பி வழங்கப்படாது என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

MUST READ