spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிக்கிரவாண்டி தொகுதியில் போலீசார் உடன் பாமகவினர் வாக்குவாதம்

விக்கிரவாண்டி தொகுதியில் போலீசார் உடன் பாமகவினர் வாக்குவாதம்

-

- Advertisement -

விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களிலும் போலீசார் உடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

விக்கிரவாண்டி தொகுதியில் போலீசார் உடன் பாமகவினர் வாக்குவாதம்விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்குகளை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

we-r-hiring

இந்த நிலையில் மாலை 3 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கக்கனூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட சென்ற பாமக வேட்பாளர் அன்புமணியை அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதாகவும்,

இதனால் பாமக வேட்பாளர் அன்புமணி மற்றும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

பாமக வேட்பாளருடன் வரும் நபர்களையும் மையத்திற்கு உள்ளே அனுமதிக்க வேண்டும் என கூறியதால் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டது என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.

MUST READ