வெடி விபத்து நடந்த கல்குவாரி அருகே வேனில் 1,200 கிலோ வேதிப்பொருட்கள் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டது!
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியில் அமைந்துள்ள கல்குவாரியில் வெடிமருந்துகளுடன் இருந்த வேன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு வேனில் வெடிக்காத வெடிமருந்துகள் உள்ளன. இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ள காவல்துறையினர், மீட்புப்படையினர் உள்ளிட்டோர் வெடி மருந்துகள் உள்ள வேனை பாதுகாப்பாக அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கல்குவாரியின் உரிமையாளர் ராஜ்குமார், மேற்பார்வையாளர், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல்துறை தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
கோடை வெயில் தாக்கம் – ஆவின் மோர் விற்பனை அதிகரிப்பு !
அதேபோல், காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.