இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பில் ‘மாமன்னன்’ படத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதி!
உலக செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் குகேஷ். இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளார். அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உறுதியும், திறமையும் உங்களை செஸ் விளையாட்டின் உயர்ந்த நிலையை அடையச் செய்துள்ளது. குகேஷின் சாதனை இளம் திறமையாளர்களுக்கு உத்வேகமாக, பெருமையான தருணமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.