spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை!

‘இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை!

-

- Advertisement -

 

தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை - டிடிவி தினகரன் சாடல்..

we-r-hiring

சமவேலைக்கு சம ஊதியம் கோரி 3- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் தமிழக காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

‘பெண்களின் கதாபாத்திரம் வலிமையானதாக இருக்கும்’….. ரணம் படம் குறித்து வைபவ்!

இது தொடர்பாக, அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311- வது வாக்குறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது ஊதிய முரண்பாடை களைய குழு அமைக்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நம்பி ஆசிரியர்கள் களைந்து சென்றனர்.

அரசு அமைத்த குழுவுக்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னரும் தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக்கூறி கடந்த மூன்று நாட்களாக நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

பொய்யான வாக்குறுதிகளின் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்பதற்கு பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து மற்றும் மின்வாரிய ஊழியர்கள் என நாள்தோறும் நடைபெறும் போராட்டங்களே சாட்சி.

‘கலகலப்பு 3’ படத்தில் நடிக்கும் கவின்…… மறுப்பு தெரிவித்த சுந்தர். சி?

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிப்பதோடு, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தனது அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

MUST READ