வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு- பெண் அதிகாரி வீட்டில் சோதனை
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.
வேலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக தற்போது பணியாற்றிவருபவர் ஆர்த்தி. இவர் தர்மபுரி மாவட்ட மாவட்டத்தில் பணியாற்றி வந்த போது வருமானத்திற்கு அதிகமாக அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கூடுதல் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ள ஆர்த்தி வீட்டில் காலை முதல்
சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் மைதிலி தலைமையில் பத்துக்கு மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் நார்த்தாம்பட்டியில் உள்ள ஆர்த்தியின் கணவர் ஆனந்த மூர்த்தி வீட்டிலும், திருச்சி காஜாமலையில் உள்ள ஆர்த்தியின் தந்தை கலைமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.