spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜாக்டோ- ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு!

ஜாக்டோ- ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு!

-

- Advertisement -

 

ஜாக்டோ- ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு!
Photo: TN GOVT

நாளை (பிப்.15) நடைபெறவிருந்த ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தப் போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

நடிகை பூனம் பாண்டேவிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்கு

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், நாளை (பிப்.15) மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று (பிப்.14) மதியம் 12.00 மணியளவில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன், வெங்கடேசன், நேரு, தியோடர் ராபின்சன், தாஸ், பொன்னிவளவன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அத்துடன், முதலமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினர்.

இந்த சந்திப்பின் போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

வேறு ஒருவர் நடித்திருந்தால் மலைக்கோட்டை வாலிபன் வெற்றி பெற்றிருக்கும்… பிரபல வில்லன் நடிகர் சர்ச்சை பேச்சு…

அதைத் தொடர்ந்து, நாளை (பிப்.15) நடைபெறவிருந்த போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

MUST READ