Homeசெய்திகள்தமிழ்நாடுஒடிசாவுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா?- உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி

ஒடிசாவுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா?- உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி

-

ஒடிசாவுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா?- உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி

தமிழகத்தை போதை மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் கிடைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழகத்தை போதை மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் கிடைக்கின்றன. இதை ஒடுக்க எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. மதுரையில் டாஸ்மாக்கில் மது குடித்த இருவர் இறந்துள்ளனர். அப்படியான ஒரு நிலை இருக்கிறது. விசாரணை நடக்கிறது. மதுபானத்தில் கலப்படம், கள்ளச்சாராய இறப்புகளுக்கு எல்லாம் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இப்படியான நிலை இருக்கிறது.

நாட்டை உலுக்கிய துயரமான சம்பவம் ஒடிசா ரயில் விபத்து. தமிழகத்தில் இருந்து சென்ற அமைச்சர் குழு, விபத்து நடந்த இடத்திற்கே செல்லவில்லை. முதல்வரின் மகன் பிரதமர் வருகிறார் என்பதால் செல்லவில்லை என சொல்வதை சரியா? சுற்றுலா செல்வது போல கூலிங் கிளாஸ் அணிந்து செல்கிறார் உதயநிதி. முழுமையாக விசாரித்து ஒரு அறிக்கை தராமல், விமான நிலையத்தில் 5 பேரின் நிலை தெரியவில்லை என ஒரு அறிக்கை, யாருக்கும் பாதிப்பு இல்லை என இன்னொரு அறிக்கை கொடுத்துள்ளார்கள்” எனக் கூறினார்.

Image

மேலும் டிவிட்டரில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ள ஜெயக்குமார், “நாடே மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளது! இன்னும் கண்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நம் கண்களை மூடவிடாமல் செய்கின்றன. இன்னும் நம் காதுகளில் மரண ஓலங்கள் ஒலித்துகொண்டிருக்கின்றன! இத்தனை இடர்களுக்கு இடையிலும் ஆய்வுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ