தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையில் இன்ஸ்பெக்டர், மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட 33 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்கள் மட்டும் இதனை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 5 ஆகும் .
இந்த பணியிடங்களுக்கு ஹாக்கி, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், கபடி, கூடைபந்து, செஸ், டெபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வி தகுதி
1. இன்ஸ்பெக்டர் மற்றும் tax assistant பணியிடங்களுக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. multi tasking staff பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். tax assistant, multi tasking staff பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை விண்ணப்பிக்க https://www.tnincometax.gov.in/ என்ற இணையதளத்தில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.