கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்தது.
புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்தவர் ஜோசப் ராஜா. ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி சின்னத்துரை அதிரடி கைது! (apcnewstamil.com)
கருணாபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சிபிசிஐடி 10 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.