Homeசெய்திகள்தமிழ்நாடுகொடநாடு வழக்கு - விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு!

கொடநாடு வழக்கு – விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு!

-

கொடநாடு கொலை, கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்ய விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பாக கனகராஜ் மற்றும் விசாரணை அதிகாரி ADSP முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலிசார் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.  குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

கடந்த ஒன்பதாம் தேதி எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் நீதிபதிகள் புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு தரப்பு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நீதிபதிகள் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் விரைவில் சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை வழக்கை அடுத்த மார்ச் மாதம் 08ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

MUST READ