spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் விவகாரம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை" - த.வெ.க.

கரூர் விவகாரம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை” – த.வெ.க.

-

- Advertisement -

கரூர் விவகாரம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை" - த.வெ.க.

கரூர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரிக்கிறது. விஜய் மீதான சென்னை உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர், “எங்கள் தரப்பில் விளக்கமே கேட்காமல், உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரூரில் இருந்து போலீசாரின் கட்டாயத்தால் விஜய் வெளியேறினார். பரப்புரை பேருந்தின் அருகே நிறைய வாகனங்கள் வந்தபோது, ஒரு வாகனத்தில் மோதியுள்ளது.

we-r-hiring

கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும். தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஒரே வழக்கில் எப்படி இரு உத்தரவுகள்?” என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘வழிகாட்டு நெறிமுறைகள் கோரிய வழக்கில் மதுரை அமர்வு, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை அமர்வு இதனை விசாரிப்பதை மேற்கோள் காட்டி, அங்கு முறையீடு செய்ய அறிவுறுத்தியது. மேலும், உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை; அஸ்ரா கர்க், சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார்” என்று பதிலளித்தார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் உணவு இடைவேளைக்காக விசாரணையை ஒத்திவைத்தனர். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ