கிராம உதவியாளர் பணிக்கு, கம்ப்யூட்டர் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் – கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர், எம்.டி.எஸ் பதவிகளை நிரப்ப ஆட்சேர்ப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் பகுதி திருத்தம் செய்யப்படுகிறது.

இதன்படி இந்த பணிகளுக்கு இடஒதுக்கீடு விதிகளை கடைபிடிக்கும் விண்ணப்பதாரரர்கள் விருப்பத்தின்படி, ஒட்டுமொத்த தகுதி பட்டியலில் இருந்து தனித்தனி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிப்படும்.
வரும் 12ந் தேதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மொத்த காலியிடங்களுக்கு 1:3 வகை வாரியாக பட்டியலிடப்படுவர். உதவியாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்படுபவர்கள், கட்டாயமாக கம்யூட்டர் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். முதல், 2வது விருப்பமாக உதவியாளர் பதவியை தேர்வு செய்தவர்களும் கம்யூட்டர் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு வருவாய்த்துறையை அலுவலக நேரங்களில் 0413 2299567 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.