2025 -2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிகணினி வாங்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டென்டர் கோரியுள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு 20 லட்சம் மடிகணினி வாங்க தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டென்டர் கோரியுள்ளது. 8 GB RAM, 256 GB SSD HARD DISK, 14 அல்லது 15 இன்ச் திரை கொண்டதாக மடிக்கணினி இருக்கும். Bluetooth 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 செல் லித்தின் அயன் பேட்டரி கொண்ட மடிக்கணினிகள் முன்புறம் 720 P HD கேமிரா, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல் திரன் கொண்டவையாகவும், ஓராண்டு வாரண்டியுடனும், மடிக்கணிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. மேலும் , வழங்கப்படும் விலையில்லா மடிக்கணிகளின் குறைகளை தீர்வுகானும் வகையில் தனி அழைப்பு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் அடுத்த 6 மாதங்களுக்குள் வாங்கப்பட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகை அடமானம் வைக்க இவ்வளவு நிபந்தனையா? உடனே திரும்பப்பெறுக – ஈபிஎஸ்..