Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றிமுகம்... அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்...

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றிமுகம்… அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்…

-

- Advertisement -
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மத்தியில் அரியணை ஏறப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

https://x.com/i/status/1797871767085793297

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் பின்னடவைச் சந்தித்துள்ளனர். தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் காலை முதல் திமுக தொண்டர்கள் வரத் தொடங்கினர். ஒவ்வொரு திமுக கூட்டணி கட்சியினர் முன்னிலை நிலவரம் வந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி, திமுக தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

MUST READ