spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம்

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுஆனால் அவர் சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 11 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தப்பியோடிய கைதி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக திமுக வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்ததாக அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளர் மலர்க்கொடி கட்சிக்கு களங்கம், அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

MUST READ