Homeசெய்திகள்தமிழ்நாடு"மாணிக்கம் தாக்கூர் வழக்கில் ஒரு வாரத்தில் முடிவு"- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

“மாணிக்கம் தாக்கூர் வழக்கில் ஒரு வாரத்தில் முடிவு”- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

-

- Advertisement -

 

"மாணிக்கம் தாக்கூர் வழக்கில் ஒரு வாரத்தில் முடிவு"- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் பா.ஜ.க.வின் மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சசிகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 25) காலை 11.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!

இதையடுத்து வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

MUST READ